November 16, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > மருதமுனை பொது நூலகத்திற்கு தேசிய விருது

மருதமுனை பொது நூலகத்திற்கு தேசிய விருது

மருதமுனை பொது நூலகத்திற்கு தேசிய விருது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

தேசிய வாசிப்பு மாதம் – 2026 ஐ முன்னிட்டு, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதிலும் அறிவுசார் சமூகத்தை கட்டியெழுப்புவதிலும் ஆற்றிவரும் சிறப்பான சேவையை பாராட்டி, கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கும் மருதமுனை பொது நூலகத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் விழா, கொழும்பு 07, சுதந்திர மாவத்தையில் அமைந்துள்ள  தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் கேட்போர் கூடத்தில் (13) நடைபெற்றது. இதன்போது, மருதமுனை பொது நூலகத்திற்கான விருதையும் சான்றிதழையும் நூலகர் எஸ்.எம்.அமீனுதீன் பெற்றுக்கொண்டார்.

மருதமுனை பிரதேசத்தின் கல்வி, அறிவு மற்றும் வாசிப்புக் கலாசார வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் மருதமுனை  நூலகத்திற்கு கிடைத்துள்ள இந்தத் தேசிய அங்கீகாரம், பிரதேச மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *