October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

50ஆவது தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டியில் பாலுராஜ்க்கு தங்கப்பதக்கம்! 

50ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கராத்தே போட்டியில்இ கட்டா (Kata)பிரிவில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த S. பாலுராஜ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  கொழும்பு களனி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (02) நடைபெற்ற இப்போட்டியில், கட்டா பிரிவில் திறமையை வெளிப்படுத்திய பாலுராஜ் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இவரின் பயிற்றுவிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் Sense S.முருகேந்திரன் தொடர்ச்சியான முறையில் தங்கப் பதக்கம் வென்ற பாலுராஜுக்கு கல்முனை நெற்றின் வாழ்த்துக்கள்

Read More

சிறுவர் தினத்தில் சிறுவர்களை மகிழ்வித்த அக்கரைப்பற்று CDFF; பாலர் பாடசாலைகளில் பரிசளிப்பு.

சிறுவர் தினத்தில் சிறுவர்களை மகிழ்வித்த அக்கரைப்பற்று CDFF; பாலர் பாடசாலைகளில் பரிசளிப்பு. (செல்வி வினாயகமூர்த்தி, கே.எஸ்.கிலசன்) சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று CDFF (Ceylon Development Funding Force) கிளையினால் சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று (02) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கரைப்பற்று CDFF கிளை முகாமையாளர் வடிவேல் டினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளையினால் தெரிவு செய்யப்பட்ட திருக்கோவில் தாண்டியடி சன்ரைஸ் மற்றும் மெதடிஸ்த பாலர் பாடசாலைகளில் இடம்பெற்றது. வாடிக்கையாளர்களின் குழந்தைகளின் […]

Read More

காரைதீவு மாணவி டிவானுஜாவுக்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம்!

காரைதீவைச் சேர்ந்த சகாதேவராஜா டிவானுஜா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாம் கட்ட MBBS பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றமைக்காக “செல்லத்தங்கம் தம்பிப்பிள்ளை நினைவு தங்கப் பதக்கம் – 2026” விருதுக்கு தெரிவு செய்யப்பட்டு இன்றைய 30 வது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் பேராசிரியர் சி.மௌனகுருவிடமிருந்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இத்தங்கப் பதக்கம் இன்று 3ஆம் திகதி, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் டி. வரகுணம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுப் […]

Read More

சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலய சிறுவர்தின நிகழ்வு

சிறார்களின் உற்சாகத்துடன் சர்வதேச சிறுவர் தினம் களைகட்டியது (க.டினேஸ் ) சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு, சிறார்களின் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த நிலையில் (01) சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி டிலக்சி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் பங்கேற்புடன் சிறார்களின் உடல் மற்றும் உள ஆற்றல்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறுவர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சிறார்களின் […]

Read More

உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபானக் கடைகள் இன்று மூடப்படும் – மது வரித் திணைக்களம் அறிவிப்பு!

​சௌவியதாசன் ​இலங்கையில் உள்ள மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.​உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 03, சனிக்கிழமை) இலங்கை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் (Liquor Shops) மூடப்படும் என மது வரித் திணைக்களம் (Excise Department) அறிவித்துள்ளது. ​முக்கிய நோக்கங்கள்:​மது பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல்.​மதுவிலக்கு இயக்கம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்.​மதுப் பழக்கத்திலிருந்து விலகி இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்.​இவற்றை நோக்கமாகக் கொண்டே ஆண்டுதோறும் அக்டோபர் 3ஆம் […]

Read More

இன்றைய பட்டமளிப்பு விழாவிற்காக கிழக்கு பல்கலைக்கழகம் விழாக்கோலம்!

 (வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப் பட்டமளிப்பு விழாவிற்காக, பிள்ளையாரடியில் அமைந்துள்ள சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின்,  பேராசிரியர் த. வரகுணம் நினைவு மண்டப வளாகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. 1000 இருக்கைகள் உள்ள குறித்த மண்டபத்தில், வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் பொதுப் பட்டமளிப்பு விழா இதுவாகும். Eusl கொடிகள் மற்றும் பல வர்ண கொடிகள் பறக்கின்றன. வருகின்ற மக்கள் தரிப்பதற்காக கொட்டகைகள் நிறுவப்பட்டுள்ளன. நாளை 3 ஆம் திகதி முதல் ,4,5ஆம் திகதிகளில், […]

Read More

நாளை (03) ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ரதபவனி – காரைதீவு முதல் கல்லடி வரை இரு தினங்கள்!!

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை (1926-2026) முன்னிட்டு  தெய்வீக ரத ஊர்வலம் நாளை  (3) சனிக்கிழமையும், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் (4) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புனித ரத ஊர்வலம் காரைதீவு ராமகிருஷ்ண மிஷன்  சாரதா இல்லத்தில் இருந்து தொடங்கி கல்லடி ராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமம்  வரை இரு தினங்கள் நடைபெறவுள்ளது என மட்டக்களப்பு மாநில இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி தெரிவித்தார். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், […]

Read More

கிழக்கின் கலைச்சங்கமம்’ மாபெரும் ஐந்து நாள் பெருவிழா-அக்கரைப்பற்றில் நாளை 3 முதல் 7ஆம் திகதி வரை.

( வி.ரி. சகாதேவராஜா,) கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யும் ‘கிழக்கின் கலைச்சங்கமம் – Eastern Art Fusion’ கலை விழா நாளை 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. முன்னொருபோதும் நடைபெறாத அளவில் ஐந்து நாட்கள் கொண்ட பல்வேறு கலை வடிவங்களை உள்ளடக்கியதான இந்த மாபெரும் கலைச்சங்கமம் எனும் பெருவிழா நடைபெற உள்ளது.  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்  பணிப்பாளர் […]

Read More

மட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Batticaloa Expo 2026) ஆரம்பமானது

கிழக்கு மாகாணத்தில் உள்ள சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு புதிய சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அவர்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை பரந்த சந்தைக்கு அறிமுகப்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அறிமுகப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Batticaloa Expo 2026) இன்று ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 04 ஆம் திகதி வரை (4 […]

Read More

மகாசக்தி பாலர் பாடசாலையில் சிறுவர் தினக் கொண்டாட்டம் – 2026

(அ.யனுஷ்பிரஜன்) அக்கரைப்பற்று மகாசக்தி பாலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு நேநற்று சிறப்பாக நடைபெற்றது “சிறுவர்களே நாட்டின் எதிர்காலம்” என்ற உயரிய சிந்தனையை முன்னிறுத்தி, சிறார்களின் மகிழ்ச்சி, திறமைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பாலர் பாடசாலையின் சிறார்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர் சிறுவர்களின் உடல், உள மற்றும் சமூக வளர்ச்சிக்கு மகிழ்ச்சியான கற்றல் சூழல் மிகவும் அவசியமானது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. சிறார்களின் திறமைகளை ஊக்குவிப்பதோடு, அவர்களிடையே […]

Read More