October 4, 2026

Blog Post

Kalmunai Net > Uncategorized > உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபானக் கடைகள் இன்று மூடப்படும் – மது வரித் திணைக்களம் அறிவிப்பு!

உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபானக் கடைகள் இன்று மூடப்படும் – மது வரித் திணைக்களம் அறிவிப்பு!

​சௌவியதாசன்

​இலங்கையில் உள்ள மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
​உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 03, சனிக்கிழமை) இலங்கை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் (Liquor Shops) மூடப்படும் என மது வரித் திணைக்களம் (Excise Department) அறிவித்துள்ளது.


​முக்கிய நோக்கங்கள்:
​மது பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல்.
​மதுவிலக்கு இயக்கம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்.
​மதுப் பழக்கத்திலிருந்து விலகி இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்.
​இவற்றை நோக்கமாகக் கொண்டே ஆண்டுதோறும் அக்டோபர் 3ஆம் தேதி ‘உலக மதுவிலக்கு தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நாடு தழுவிய ரீதியில் அனைத்து மதுபான நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
​உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கைகளின்படி, உலக அளவில் மது பயன்பாட்டின் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் மக்கள் உயிரிழப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *