November 19, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இன்று நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027 வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் – என்பிபி உறுப்பினர் மாத்திரம் நடுநிலை!!

இன்று நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027 வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் – என்பிபி உறுப்பினர் மாத்திரம் நடுநிலை!!

​(வி.ரி. சகாதேவராஜா)

​அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத் திட்டம், 12 உறுப்பினர்களின் ஆதரவுடன்  இன்று (18) புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

என்பிபி உறுப்பினர் எஸ். நிரோஜன் மாத்திரம் நடுநிலை வகித்தார்.ஏனையோர் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

​நாவிதன்வெளி பிரதேச சபையின் 17ஆவது கூட்டத்தொடரும், 2027ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத் திட்ட அமர்வும் தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.

 சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, கார்த்திகை மாதத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

​தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத் திட்டத்திற்கு, சபையின் 12 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். எனினும், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் மாத்திரம் இதற்கு நடுநிலை தெரிவித்த நிலையில், ஒரு உறுப்பினரைத் தவிர ஏனைய உறுப்பினர்களின் பூரணஆதரவுடன் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

​வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து, பிரதேசத்தின் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பான உறுப்பினர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அது குறித்த வாதப்பிரதிவாதங்களுடன்  சபை நடவடிக்கைகள் நிறைவுபெற்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *