November 18, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > நாளை (19) அமரர் தோழர் க. பத்மநாபாவின் 75வது அகவை தினம்; மல்வத்தையில் பிரதான நிகழ்வு

நாளை (19) அமரர் தோழர் க. பத்மநாபாவின் 75வது அகவை தினம்; மல்வத்தையில் பிரதான நிகழ்வு

(வி.ரி.சகாதேவராஜா)

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்(EPRLF) செயலாளர் நாயகம் அமரர் தோழர் க. பத்மநாபாவின் 75வது அகவை தினம் நாளை (19-11-2026) வியாழக்கிழமை ஆகும் .

அதனை  முன்னிட்டு, அம்பாறை மாவட்ட மல்வத்தையில் விசேட பிரதான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

தோழர் பத்மநாபா சமூகசேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில், விசேட பூஜை வழிபாடுகளும், முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு மல்வத்தை, சடயந்தலாவ வீதியில் அமைந்துள்ள பாரதியார் பாலர் பாடசாலையில் நாளை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

 “நாம் மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை; மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம்”

 – என்ற தோழர் பத்மநாபாவின் சிந்தனைக்கமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என ஏற்பாட்டாளர் மு.வரதராசன் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *