November 18, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > பாண்டிருப்பு சிவன் ஆலயத்தின் 2027ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்க நாட்காட்டி வெளியீடு!

பாண்டிருப்பு சிவன் ஆலயத்தின் 2027ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்க நாட்காட்டி வெளியீடு!

பாண்டிருப்பு சிவன் ஆலயத்தின் 2027ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்க நாட்காட்டி வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று 18.11.2026 ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது, ஆலயத்தின் பிரதமகுருவான சத்தியோஜாத சிவாச்சாரியார் சிவஸ்ரீ வசந்த டிமலேஸ்வர குருக்கள் அவர்களினால் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, ஆலய நிர்வாக சபையினரால் 2027ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்க நாட்காட்டி விநியோகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நாட்காட்டியைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் ஆலய நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *