November 18, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி விசேட பூஜை எதிர்வரும் 22ஆம் திகதி!

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி விசேட பூஜை எதிர்வரும் 22ஆம் திகதி!

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமியின் விசேட பூஜை நிகழ்வுகள் எதிர்வரும் 22ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளன.

வித்யா சாகரன், மதுரா சாதகர் சிவஸ்ரீ கணேஷ திவிசாந்த குருக்கள் மற்றும் ஸ்ரீ தர்மசாஸ்த்ர யாத்திரைப் பேரவையின் குருசாமி ஜெ. ஜெசிந்திரகுமார் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன்போது, காலை 10.00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு விசேட அபிஷேகம் மற்றும் அலங்காரம் இடம்பெறுவதுடன், அதனைத் தொடர்ந்து ஐயப்பன் பஜனை மற்றும் திவ்ய நாம சங்கீர்த்தன நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து நண்பகல் 12.00 மணிக்கு மகா தீபாராதனை, பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதுடன், அன்னதான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சுவாமிமார்கள், பக்த அடியார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொண்டு ஐயப்ப சுவாமியின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

இடம்: ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம், பிள்ளையார் கோவில் வீதி, நற்பிட்டிமுனை – 01.

தொடர்புகளுக்கு: 075 248 0061.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *