October 4, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலய சிறுவர்தின நிகழ்வு

சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலய சிறுவர்தின நிகழ்வு

சிறார்களின் உற்சாகத்துடன் சர்வதேச சிறுவர் தினம் களைகட்டியது

(க.டினேஸ் )

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு, சிறார்களின் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த நிலையில் (01) சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி டிலக்சி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் பங்கேற்புடன் சிறார்களின் உடல் மற்றும் உள ஆற்றல்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறுவர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சிறார்களின் முகங்களில் புன்னகையையும், உள்ளங்களில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திய இந்நிகழ்வில், ஆசிரியர்கள், மற்றும் இந்திரன் அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினர்களும், நாவிதன்வெளி உபதவிசாளர் திரு ரூபன் அவர்களும், நாவிதன்வெளி வங்கி முகாமையாளரும் (BOC), கலந்துகொண்டு சிறப்பிதத்ததுடன், மாணவர்களின் பங்கேற்பையும் ஆர்வத்தையும் மேலும் ஊக்குவித்தது.

சிறார்களின் திறமைகள், ஆற்றல்கள் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரும் இந் நிகழ்வில் பங்குகொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதோடுஇந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள், அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *