காரைதீவைச் சேர்ந்த சகாதேவராஜா டிவானுஜா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாம் கட்ட MBBS பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றமைக்காக “செல்லத்தங்கம் தம்பிப்பிள்ளை நினைவு தங்கப் பதக்கம் – 2026” விருதுக்கு தெரிவு செய்யப்பட்டு இன்றைய 30 வது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் பேராசிரியர் சி.மௌனகுருவிடமிருந்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இத்தங்கப் பதக்கம் இன்று 3ஆம் திகதி, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் டி. வரகுணம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வில் வழங்கப்பட்டது.
காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய பட்டமளிப்பு நிகழ்வில், டிவானுஜாவின் பெயர் அறிவிக்கப்பட்டதும் பல்கலைக்கழக வேந்தரிடமிருந்து குறித்த தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
காரைதீவு விபுலானந்த வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்
வி.ரி.சகாதேவராஜா நேசரஞ்சினி தம்பதியரின் இரண்டாவது புத்திரி என்பது குறிப்பிடத்தக்கது.






