October 4, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சிறுவர் தினத்தில் சிறுவர்களை மகிழ்வித்த அக்கரைப்பற்று CDFF; பாலர் பாடசாலைகளில் பரிசளிப்பு.

சிறுவர் தினத்தில் சிறுவர்களை மகிழ்வித்த அக்கரைப்பற்று CDFF; பாலர் பாடசாலைகளில் பரிசளிப்பு.

சிறுவர் தினத்தில் சிறுவர்களை மகிழ்வித்த அக்கரைப்பற்று CDFF; பாலர் பாடசாலைகளில் பரிசளிப்பு.

(செல்வி வினாயகமூர்த்தி)

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று CDFF (Ceylon Development Funding Force) கிளையினால் சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று (02) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அக்கரைப்பற்று CDFF கிளை முகாமையாளர் வடிவேல் டினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளையினால் தெரிவு செய்யப்பட்ட திருக்கோவில் தாண்டியடி சன்ரைஸ் மற்றும் மெதடிஸ்த பாலர் பாடசாலைகளில் இடம்பெற்றது.

வாடிக்கையாளர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், ஆரம்ப வயதுக் கல்வியை ஊக்குவித்தல், சிறுவர்களின் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக அவர்கள் வளர்வதை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இப்பரிசளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது, குறித்த இரு பாலர் பாடசாலைகளிலும் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், சிறுவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களையும் CDFF ஊழியர்கள் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் CDFF கிளை முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் தாண்டியடி உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சிறுவர்களின் மகிழ்ச்சி, உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 1ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் வரையறைப்படி, 18 வயதுக்குக் குறைந்தவர்கள் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *