50ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கராத்தே போட்டியில்இ கட்டா (Kata)பிரிவில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த S. பாலுராஜ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு களனி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (02) நடைபெற்ற இப்போட்டியில், கட்டா பிரிவில் திறமையை வெளிப்படுத்திய பாலுராஜ் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
இவரின் பயிற்றுவிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் Sense S.முருகேந்திரன்
தொடர்ச்சியான முறையில் தங்கப் பதக்கம் வென்ற பாலுராஜுக்கு கல்முனை நெற்றின் வாழ்த்துக்கள்