October 3, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சிறப்பாக ஆரம்பமான கிழக்கு பல்கலைக்கழக 30 வது  பொதுப் பட்டமளிப்பு விழா !

சிறப்பாக ஆரம்பமான கிழக்கு பல்கலைக்கழக 30 வது  பொதுப் பட்டமளிப்பு விழா !

வேட்டியுடன் வேந்தர் மௌனகுரு கைகூப்பி வரவேற்று 285  பேருக்கு பட்டங்களை வழங்கினார்!!

 ( வி.ரி. சகாதேவராஜா)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று 3ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமானது.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் முன்னிலையில், ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்ட வேந்தர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் ஆரம்பமானது.

புதிய வேந்தர் பேராசிரியர் சின்னையா மௌனகுரு பாரம்பரிய வேட்டி வாலாமணி அணிந்து  அனைவரையும் கைகூப்பி வரவேற்று காலையில் முதல் அமர்வில் 285 பேருக்கு பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன சிறப்பு பேராளராக கலந்து சிறப்பித்தார்.

 மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின்,  பேராசிரியர் த. வரகுணம் நினைவு மண்டபத்தில் நடைபெறுகிறது.

1000 இருக்கைகள் உள்ள குறித்த மண்டபத்தில் வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் பொதுப் பட்டமளிப்பு விழா இதுவாகும்.

3,4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் சகல பீடங்களையும் சேர்ந்த 2369  பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இரண்டாம் அமர்வில் 317 பேருக்கும் மூன்றாவது அமர்வில் 316பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

அதேபோல்  4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 864 பேருக்கும் , 5 ஆம் திகதி திங்கட்கிழமை 587 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *