(அ.யனுஷ்பிரஜன்)
அக்கரைப்பற்று மகாசக்தி பாலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு நேநற்று சிறப்பாக நடைபெற்றது
“சிறுவர்களே நாட்டின் எதிர்காலம்” என்ற உயரிய சிந்தனையை முன்னிறுத்தி, சிறார்களின் மகிழ்ச்சி, திறமைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பாலர் பாடசாலையின் சிறார்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர்
சிறுவர்களின் உடல், உள மற்றும் சமூக வளர்ச்சிக்கு மகிழ்ச்சியான கற்றல் சூழல் மிகவும் அவசியமானது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. சிறார்களின் திறமைகளை ஊக்குவிப்பதோடு, அவர்களிடையே தன்னம்பிக்கை, நட்பு மற்றும் ஒற்றுமை போன்ற பண்புகளை வளர்க்கும் வகையிலும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
சிறுவர் தின நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து, சிறார்களின் மகிழ்ச்சிக்கும் திறன் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த மகாசக்தி பாலர் பாடசாலை ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், பெற்றோர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்



