October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த மாணவன் ; உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பாறுக் ஷிஹான் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை  மாவட்டம் கல்முனைத் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள  உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த இருதயநாதர் அம்றிதன் (வயது 19) என்ற மாணவன் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.  இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. , தனது கையை வெட்டியுள்ளார். இதன்போது ஏற்பட்ட […]

Read More

இளஞ்சைவ பண்டிதர், சைவ பண்டிதர் பரீட்சைகளுக்கான (2027) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் 2027 ஆண்டு நடைபெற இருக்கின்ற இளஞ்சைவ பண்டிதர், சைவபண்டிதர் பட்டப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.மேலதிக விபரங்களுக்கும் நிகழ்நிலை விண்ணப்பப் படிவத்திற்கும்: https://saivatm.org/index.php/application-form/📅 பரீட்சை நடைபெற இருக்கும் உத்தேச காலம்: ⏳ 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம்⏳✅ இளஞ்சைவ பண்டிதர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகுதிகள்: G.C.E. (A/L)/இந்து தர்மாசிரியர் பரீட்சையில் சித்தி/NVQ Level 4 சான்றிதழ்✅சைவ பண்டிதர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகுதிகள்: கீழ்வரும் பட்டங்களில் ஏதேனுமொன்றையேனும் பெற்றிருத்தல் இளஞ்சைவ பண்டிதர்/பால சித்தாந்த பண்டிதர்/ சித்தாந்த பண்டிதர்/ […]

Read More

அனோஜனின் மரணதண்டனை தீர்ப்பை நீக்குங்கள் சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வலியுறுத்தியுள்ளது.

அனோஜனின் மரணதண்டனை தீர்ப்பை நீக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வலியுறுத்தியுள்ளது. அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள செய்தியை இங்கே மொழி பெயர்த்து தருகின்றோம் சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் “மதநிந்தனை” செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை புலம்பெயர் தொழிலாளி ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை சவூதி அரேபிய அதிகாரிகள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வலியுறுத்தியுள்ளது. அவர் தனது கருத்து சுதந்திர உரிமையைப் […]

Read More

உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கோமாரியில் நடைபெற்ற சிறுவர் நிகழ்வு

பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் “உதவும் பொற்கரங்கள் அமைப்பு – கனடா” அமைப்பின் ஏற்பாட்டில், “சிரிப்பால் சிறகு விரி, சிந்தனையால் உலகை வெற்றிகொள்” எனும் தோனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.​ இவ்விழாவானது கனடாவைச் சேர்ந்த சமூக சேவையாளர் திரு. விசு கணபதிப்பிள்ளை அவர்களின் முயற்சியிலும், கனடா உதயன் பத்திரிகை உரிமையாளரும் ஆசிரியருமான “நற்பின் நாயகன், சமூக ஜோதி” திரு. N. லோகேந்திரலிங்கம் அவர்களின் நிதி அனுசரணையிலும் சிறப்பாக இடம்பெற்றது.​ இக்கொண்டாட்ட நிகழ்வில் மாலைநேர […]

Read More

அனோஜன் விவகாரம்; அரசின் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெறுகிறது

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜிரஹேரத் தெரிவித்துள்ளார். சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு ஒக்டோபர் 17 என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை மற்றும் சவூதி சட்ட நிபுணர்கள் இணைந்து மேல்முறையீட்டை தயாரித்து வருவதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் தண்டனையை குறைக்க அல்லது மன்னிப்பு வழங்கக் கோரி இராஜதந்திர முயற்சிகள் […]

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு!

நவம்பர் 03ஆம் திகதிக்கு மேலதிக விசாரணை ஒத்திவைப்பு! கொழும்பு, ஒக்டோபர் 07:கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு வழக்கின் மேலதிக விசாரணை, 2026 நவம்பர் 03ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (07.10.2026) புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர் மாயாதுன்ன கொரியா மற்றும் மாண்புமிகு நீதியரசர் லக்மாலி கருணாநாயக்க திஸாநாயக்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு […]

Read More

ஷிரந்தி ராஜபக்ச கைது – இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். கிருலப்பனை, பூர்வராம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காலை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஷிரந்தி ராஜபக்சவிடம் சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ‘சிறிலியா சவிய’ நிதியத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் […]

Read More

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 2026: ஒக்டோபர் 11 ஆம் திகதி ஆரம்பம்!

-கிரிஷாந் மகாதேவன் – கல்முனை மாநகர் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் பராபவ வருஷ வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இவ்வுற்சவம் நற்பிட்டிமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலய பரிபாலன சபையினரின் உபயத்துடன் ஆரம்பமாகி, ஒக்டோபர் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை பாலிச்சடங்குடன் இனிதே நிறைவுபெறவுள்ளது. முக்கிய உற்சவ நிகழ்வுகள்: ஆரம்ப நாள் (11-10-2026 ஞாயிறு): முதல் நாள் திருச்சடங்கு ஆரம்பமாகி, நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயத்தில் இருந்து […]

Read More

நாளை கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட(மருத்துவ பீடம்) பீடாதிபதி  தெரிவுப் பட்டியல் சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  நாளை(7) புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது  பீடாதிபதி பட்டியல் ‘டீன்ஸ் லிஸ்ட்’  இல் 2018/2019 முதல் 2022/2023 கல்வியாண்டுகள் வரையில் சாதனை படைத்த 23 மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட உள்ளனர். மருத்துவ இளங்கலை (MBBS) கற்கைநெறியின் 2018/2019 முதல் 2022/2023 வரையான கல்வியாண்டுகளுக்கான ‘Dean’s List’ பட்டியலை கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான […]

Read More

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு.

(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு, பாடசாலை அதிபர் க. ஜயந்தன் தலைமையில் இன்று (06) செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. ஆசிரியர்கள் பாரம்பரிய முறைப்படி வெற்றிலை வழங்கி மாணவர்களால் வரவேற்கப்பட்டதுடன் மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பாடசாலை நுழைவாயிலில் இருந்து ஆசிரியர்கள் பேண்ட் வாத்திய இசையுடன் மாணவர்களால் மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர்.அத்துடன் ஆசிரியர் கீதம் ஆசிரியர்களினால் பாடப்பட்டமை நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆசிரியர்களுக்கு மாணவர்களால் மாலை அணிவித்து […]

Read More