October 7, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > நாளை கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 

நாளை கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 

( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட(மருத்துவ பீடம்) பீடாதிபதி  தெரிவுப் பட்டியல் சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  நாளை(7) புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது

 பீடாதிபதி பட்டியல் ‘டீன்ஸ் லிஸ்ட்’  இல் 2018/2019 முதல் 2022/2023 கல்வியாண்டுகள் வரையில் சாதனை படைத்த 23 மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட உள்ளனர்.

மருத்துவ இளங்கலை (MBBS) கற்கைநெறியின் 2018/2019 முதல் 2022/2023 வரையான கல்வியாண்டுகளுக்கான ‘Dean’s List’ பட்டியலை கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட(மருத்துவ பீடம்) பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் வெளியிட்டுள்ளார்.

குறித்த பட்டியலில் பல்வேறு கல்வியாண்டுகள் மற்றும் வெவ்வேறு தொகுதிகளைச் சேர்ந்த 23 மாணவர்கள் சிறந்த கல்விச் செயல்திறனுக்காக இடம்பெற்றுள்ளனர்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் விபரம் வருமாறு:

திஸாரி ராஜ்மோகன் – 2020/2021

ஹம்சி லோகநாயகம் – 2021/2022

இப்ராலெவ்வை பாத்திமா சமா – 2022/2023

 லீனாஹ் அப்துல் ஜவாத் – 2022/2023

மல்லவ ஆராச்சிலாகே தனுஷி – 2022/2023

நுவரணி ரக்ஷிதா பெத்தநாயக்க – 2022/2023

சகாதேவராஜா டிவானுஜா – 2022/2023

ஷஹாப் சதாத் ஸமல்கா – 2022/2023

 தங்கவேல் மிதுஷாலினி – 2022/2023

க்ஷபோபகே லஹிரு பிரபாஷ்வர கருணாரத்ன – 2019/2020

கால்ல மரன்னக்காரகே கவிந்து நிர்மந்த – 2021/2022

கால்ல மரன்னக்காரகே கவிந்து நிர்மந்த – 2022/2023

 கங்காதரன் நளின்குமார் – 2022/2023

ராஜமுனி தேவயால கெதர லஹிரு பிரதீப் ஜயவர்தன – 2020/2021

செல்வரஞ்சன் கோகுலராஜ் – 2019/2020

சௌந்தரராஜா விஹ்ராஜ்– 2022/2023

வெதிவால முதியன்சலாகே இசான் பியுமால் ரூபசிங்க – 2018/2019

பாத்திமா ஜாஸா ஜுனைதீன் – 2018/2019

கிரிதரன் வத்சலா – 2018/2019

நிஷாரா ஹன்சனி பாலிஹக்கார – 2018/2019

பேரின்பராஜா தயாலஷினி – 2018/2019

வெல்லகே சமந்தி சமந்த்யா வெல்லகே – 2019/2020

சுமிதினி நடராஜா – 2018/2019

இப்பட்டியலில் Phase II Part I, Phase II Part II மற்றும் Phase III உள்ளிட்ட MBBS பரீட்சைகளில் சிறப்பாகச் செயலாற்றிய மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட(மருத்துவ பீடம்) பீடாதிபதி பேராசிரியர் தில்லை நாதன் சதானந்தன் சான்றிதழ்களை வழங்கி வைப்பார்.

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ‘Dean’s List’, மருத்துவத்துறையில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கல்விச் சாதனைக்கான முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *