October 8, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஷிரந்தி ராஜபக்ச கைது – இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்

ஷிரந்தி ராஜபக்ச கைது – இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருலப்பனை, பூர்வராம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காலை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஷிரந்தி ராஜபக்சவிடம் சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

‘சிறிலியா சவிய’ நிதியத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கணக்கொன்றில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அரச வங்கி ஒன்றிலிருந்து 10 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொண்டு, அதனை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தொடர்பான சட்ட விதிகளின் கீழ் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *