October 7, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கோமாரியில் நடைபெற்ற சிறுவர் நிகழ்வு

உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கோமாரியில் நடைபெற்ற சிறுவர் நிகழ்வு

பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் “உதவும் பொற்கரங்கள் அமைப்பு – கனடா” அமைப்பின் ஏற்பாட்டில், “சிரிப்பால் சிறகு விரி, சிந்தனையால் உலகை வெற்றிகொள்” எனும் தோனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.​

இவ்விழாவானது கனடாவைச் சேர்ந்த சமூக சேவையாளர் திரு. விசு கணபதிப்பிள்ளை அவர்களின் முயற்சியிலும், கனடா உதயன் பத்திரிகை உரிமையாளரும் ஆசிரியருமான “நற்பின் நாயகன், சமூக ஜோதி” திரு. N. லோகேந்திரலிங்கம் அவர்களின் நிதி அனுசரணையிலும் சிறப்பாக இடம்பெற்றது.​

இக்கொண்டாட்ட நிகழ்வில் மாலைநேர வகுப்புச் சிறுவர்கள், பெற்றோர்கள் மற்றும் பகுதி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் சிற்றுண்டிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் நிறைவில், இத்தகைய நற்செயல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் சமூக சேவையாளர் திரு. விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கும், நிதி அனுசரனை வழங்கிய திரு. N. லோகேந்திரலிங்கம் அவர்களுக்கும் மற்றும் நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த உதவும் பொற்கரங்கள் அமைப்பின் இணைப்பாளர் திரு. சௌவியதாசன் உள்ளிட்ட அனைவருக்கும் மாலைநேர வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன

​
​
.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *