October 8, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அனோஜன் விவகாரம்; அரசின் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெறுகிறது

அனோஜன் விவகாரம்; அரசின் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெறுகிறது

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜிரஹேரத் தெரிவித்துள்ளார்.

சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு ஒக்டோபர் 17 என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் சவூதி சட்ட நிபுணர்கள் இணைந்து மேல்முறையீட்டை தயாரித்து வருவதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் தண்டனையை குறைக்க அல்லது மன்னிப்பு வழங்கக் கோரி இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதனிடையே, சிறையில் சிவராசாவுக்கு மற்றுமொரு கைதியால் முகத்தில் கீறல்கள் மற்றும் நகக் காயங்களுக்கு உள்ளானதாக சவூதி சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது பாதுகாப்புக்காக அவர் வேறு சிறை அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனோஜனுக்கு சக கைதி தலையில் கூறிய ஆயுதத்தால் தாக்கி காயத்துக்குள்ளாக்கியதாக அனோஜன் தெரிவித்தாகவும் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விடயங்களையும் தீவிரமாக அவதானித்து மிக நெருக்கமாக முன்னெடுப்புக்கள் இடம் பெறுகிறது. இந்த விடயத்தில் அனைவரும் மிகவும் பொறுப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *