October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ. ஜோதிலிங்கம் காலமானார்!

இலங்கையின் பிரபல அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், எழுத்தாளருமான சி.அ. ஜோதிலிங்கம் (சிவாசுப்பிரமணியம் ஜோதிலிங்கம்) காலமானார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (08) எட்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடம்பெற்ற அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசியல், இனப்பிரச்சினை, ஈழத்தமிழர்களின் அரசியல் நிலவரங்கள் மற்றும் மலையக அரசியல் வரலாறு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு, தனது கருத்துக்களையும் அரசியல் பார்வைகளையும் ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து […]

Read More

அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில் க.மோகனதாசனின் ‘இருத்தலியமும் அரங்கும்’ நூல் அறிமுக விழா

அக்கரைப்பற்று இலக்கிய விழா – 2026 நிகழ்வின் ஒரு அங்கமான புத்தக கண்காட்சியில் , எழுத்தாளர் க.மோகனதாசன் எழுதிய ‘இருத்தலியமும் அரங்கும்’ நூல் அறிமுக விழா நாளை சனிக்கிழமை (10.10.2026) நடைபெறவுள்ளது. அக்கரைப்பற்று புத்தகக் காட்சி – 2026 ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில்  இந்த 6ஆவது  புத்தகக் காட்சி இடம் பெறுகிறது. இந்நிகழ்வு அக்கரைப்பற்று Cargill’s Food Cityக்கு முன்பாக அமைந்துள்ள Water Park பகுதியில் காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளது. சிராஜ் மஷ்ஹூர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கிழக்குப் […]

Read More

பொத்துவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கோமாரியில் நடமாடும் நூலக சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு!

தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரபின் வழிகாட்டலில், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் நடமாடும் நூலக சேவை என்பன நேற்று (07) பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் இடம்பெற்றது. கிராமப்புற மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், நூலகச் சேவைகளை மக்களின் வீடு தேடிச் சென்று வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, கோமாரி பிரதேசத்தில் உள்ள பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற பொத்துவில் பிரதேச சபையின் நூலக உத்தியோகத்தர்கள், […]

Read More

மசூர் மௌலானா விளையாட்டரங்கில் புதிய கழிவறைத் தொகுதி.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் புதிய கழிவறைத் தொகுதி அமைக்கும் வேலைத் திட்டம் இன்று வியாழக்கிழமை (08) கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர். கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டில்இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த மைதானத்தின் மேலதிக நுழைவாயில் கதவுகளை கல்முனை மாநகர சபை நிதியின் மூலம் […]

Read More

நாவிதன்வெளியில் சிறு, நடுத்தர மற்றும் எதிர்கால ஏற்றுமதியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறு, நடுத்தர மற்றும் எதிர்கால ஏற்றுமதியாளர்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட விசேட நிகழ்வு இன்று (08) நாவிதன்வெளி விதாதா வளநிலையத்தில் நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் பணிப்புரையின் கீழும், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா அவர்களின் வழிகாட்டலின் கீழும், பிரதேச செயலக ஏற்றுமதி அபிவிருத்தி சபை அபிவிருத்தி உத்தியோகத்தரினால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் அம்பாறை […]

Read More

எருவிலில் வரும் சனிக்கிழமை (10) மாபெரும் இரத்ததான முகாம்!

எருவிலில் அமரர் சமூகஜோதி மு. இளங்குமார் அவர்களின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்! எருவில் Y.U.K குடும்பத்தின் ஏற்பாட்டில், வர்த்தகரும் முன்னாள் தலைவருமான அமரர் சமூகஜோதி மு. இளங்குமார் அவர்களின் 50-வது ஜனன தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெறும் இந்நிகழ்வு தொடர்பான விபரங்கள்: இவ் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கும் அனைவருக்கும் பிரத்யேக T-Shirt மற்றும் பெறுமதிமிக்க […]

Read More

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் CCIB தடுப்பு நிலையம்; வர்த்தமானி வெளியீடு

பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பு 05, தொழிலாளர் செயலகக் கட்டிடத்தின் 7ஆம் மாடியில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை (CCIB) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு நிலையமாக அறிவித்துள்ளார். இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2509/11 ஒக்டோபர் 6ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Read More

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியக் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசியக் கல்லூரியில் (KM/KM Carmel Fatima College National School) 2026-ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரியின் மண்டபத்தில் கல்லூரி அதிபர் அருட்தந்தை J.லெபோன் சுதன் (OMI) அவர்களின் தலைமையில் (Glennie Hall) மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) மற்றும் பெற்றோர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, கல்முனை […]

Read More

மரண அறிவித்தல் அமரர் பேரின்பராஜா அனோஜன் (பொறியியலாளர்)- கல்முனை

கல்முனையைச் சேர்ந்த பேரின்பராஜா அனோஜன் சுகயீனம் காரணமாக இன்று காலமானார். அன்னார் காலம்சென்ற சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பராஜா , ஓய்வுநிலை அதிபர் பேரின்பராஜா அன்னபூரணி ஆகியோரின் அன்பு மகனும் ஊடகவியலாளர் ( முன்னாள் தமிழ்.எப்.எம் பணிப்பாளர்) ஹோசியா அவர்களின் கணவருமாவார்

Read More

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூன்று நூல்கள் வெளியீடு

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மூன்று புதிய நூல்களின்  வெளியீட்டு விழா  நாளை மறுநாள் (10.10.2026) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு  கல்லடியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை ராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜி மஹராஜ்  தலைமையில் இவ் விழா நடைபெறவுள்ளது.  இவ்விழாவில்  கலாபூஷணம் சதாசிவம் சரவணபவன் எழுதிய “தியாகத்தின் திருவுருவம் சுவாமி ஜீவனானந்தர்” எனும் நூலும், கலாநிதி நிலாந்தினி […]

Read More