October 9, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > மசூர் மௌலானா விளையாட்டரங்கில் புதிய கழிவறைத் தொகுதி.!

மசூர் மௌலானா விளையாட்டரங்கில் புதிய கழிவறைத் தொகுதி.!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் புதிய கழிவறைத் தொகுதி அமைக்கும் வேலைத் திட்டம் இன்று வியாழக்கிழமை (08) கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டில்
இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த மைதானத்தின் மேலதிக நுழைவாயில் கதவுகளை கல்முனை மாநகர சபை நிதியின் மூலம் புனரமைப்பு செய்வதற்கான பணிப்புரியை விடுத்த ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *