அக்கரைப்பற்று இலக்கிய விழா – 2026 நிகழ்வின் ஒரு அங்கமான புத்தக கண்காட்சியில் , எழுத்தாளர் க.மோகனதாசன் எழுதிய ‘இருத்தலியமும் அரங்கும்’ நூல் அறிமுக விழா நாளை சனிக்கிழமை (10.10.2026) நடைபெறவுள்ளது.
அக்கரைப்பற்று புத்தகக் காட்சி – 2026 ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இந்த 6ஆவது புத்தகக் காட்சி இடம் பெறுகிறது.
இந்நிகழ்வு அக்கரைப்பற்று Cargill’s Food Cityக்கு முன்பாக அமைந்துள்ள Water Park பகுதியில் காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
சிராஜ் மஷ்ஹூர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. மௌனகுரு முன்னிலை வகிக்கவுள்ளார்.
நூலினை தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பிரதிப் பதிவாளர் திரு. சஞ்சீவி சிவகுமார் அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.
“மனித வாழ்வின் இருப்பின் அர்த்தத்தினை அரங்கின் துணைகொண்டு தேடும் முயற்சி” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்நூலின் அறிமுக விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
