October 9, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > நாவிதன்வெளியில் சிறு, நடுத்தர மற்றும் எதிர்கால ஏற்றுமதியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வு

நாவிதன்வெளியில் சிறு, நடுத்தர மற்றும் எதிர்கால ஏற்றுமதியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறு, நடுத்தர மற்றும் எதிர்கால ஏற்றுமதியாளர்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட விசேட நிகழ்வு இன்று (08) நாவிதன்வெளி விதாதா வளநிலையத்தில் நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் பணிப்புரையின் கீழும், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா அவர்களின் வழிகாட்டலின் கீழும், பிரதேச செயலக ஏற்றுமதி அபிவிருத்தி சபை அபிவிருத்தி உத்தியோகத்தரினால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் அம்பாறை மாவட்ட மேம்பாட்டு உத்தியோகத்தர் வளவாளராக கலந்து கொண்டு, ஏற்றுமதி தொடர்பான விடயங்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் திறன் மேம்பாடு தொடர்பில் விளக்கங்களை வழங்கினார்.

இதன்போது ஏற்றுமதி அபிவிருத்தி சபை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சிறு கைத்தொழில் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை எதிர்கால ஏற்றுமதியாளர்களாக உருவாக்குவதற்கான அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *