October 9, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பொத்துவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கோமாரியில் நடமாடும் நூலக சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு!

பொத்துவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கோமாரியில் நடமாடும் நூலக சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு!

தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரபின் வழிகாட்டலில், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் நடமாடும் நூலக சேவை என்பன நேற்று (07) பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் இடம்பெற்றது.

கிராமப்புற மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், நூலகச் சேவைகளை மக்களின் வீடு தேடிச் சென்று வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, கோமாரி பிரதேசத்தில் உள்ள பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற பொத்துவில் பிரதேச சபையின் நூலக உத்தியோகத்தர்கள், நூலகத்தின் பயன்பாடுகள் மற்றும் வாசிப்பின் அவசியம் குறித்து விளக்கமளித்தனர்.

அத்துடன், நூலகத்திற்குப் புதிதாக அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பப் படிவங்களை இலவசமாக வழங்கி, புதிய அங்கத்தவர்களையும் இணைத்துக்கொண்டனர். வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கும் இந்த நற்பணிக்கு அப்பகுதி மக்களிடமிருந்து பெரும் வரவேற்புக் கிடைத்தமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், நூலக உதவியாளர்கள் பலரும் கலந்துகொண்டு குறித்த நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *