கல்முனை கார்மேல் பற்றிமா தேசியக் கல்லூரியில் (KM/KM Carmel Fatima College National School) 2026-ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரியின் மண்டபத்தில் கல்லூரி அதிபர் அருட்தந்தை J.லெபோன் சுதன் (OMI) அவர்களின் தலைமையில் (Glennie Hall) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) மற்றும் பெற்றோர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. எம். எஸ். சஹுதுல் நஜீம் (Mr. M. S. Sahuthul Najeem) அவர்கள் பிரதம அதிதியாகக் (Chief Guest) கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும், கௌரவ அதிதியாக (Guest of Honour) கல்முனைத் தமிழ்ப் பிரிவு கோட்டக் கல்வி அதிகாரி (D.E.O) திரு. எஸ். சுரேஷ் (Mr. S. Suresh DDE) அவர்கள் கலந்துகொண்டார்.
பாடசாலையில் அதிக புள்ளிகளை விஜயகுமார் ஆதிக்சன் (170) எனும் மாணவன் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த மாணவர்கள் உட்பட பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களுக்குப் பாராட்டுக்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






