November 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மகிழூர் கண்ணகிபுரம் மட்/பட்/ விநாயகர் வித்தியாலய மாணவிகள் சாதனை.

மகிழூர் கண்ணகிபுரம் மட்/பட்/ விநாயகர் வித்தியாலய மாணவிகள் சாதனை.

மேனன்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற மாகாண மட்ட அழகியல் போட்டிகளில் கலந்து கொண்ட பட்டிருப்பு வலய பாடசாலை மாணவர்களில் மகிழூர் கண்ணகிபுரம் மட்/பட்/ விநாயகர் வித்தியாலய மாணவிகளான செல்வி.எம்.ஜஸ்ணவி மற்றும் செல்வி எஸ். அர்ஜினி ஆகியோர் தனி நடனப் போட்டிகளில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்து தமது பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அந்த வகையில் இவர்களுக்கு வழி காட்டியாக இருந்த பாடசாலையின் அதிபர் , பயிற்சிகளை வழங்கி இவர்களை தயார் படுத்திய ஆசிரியை திருமதி. டிறோசா நிஷாந்தன் மற்றும் இந்த மாணவர்களின் வெற்றிக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் பாடசாலையின் பெற்றார் ஆசிரியர் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் பெற்றோர்கள் என அனைவரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *