November 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இலங்கை வர்த்தகச் சந்தையில் கால் பதிக்கும் நடிகை நயன்தாராவின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தயாரிப்புகள்!

இலங்கை வர்த்தகச் சந்தையில் கால் பதிக்கும் நடிகை நயன்தாராவின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தயாரிப்புகள்!

இந்தியாவில் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரத் தயாரிப்புகளான ‘Femi9’, ‘Lumi9’ மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர் (Pampers) உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள் மூலம் பிரபலமடைந்துள்ள நடிகை நயன்தாராவுடன் தொடர்புடைய வர்த்தக முயற்சி, தற்போது இலங்கைச் சந்தையிலும் தனது வியாபார நடவடிக்கைகளை விரிவுபடுத்தத் தயாராகி வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக, குறித்த உற்பத்திப் பொருட்களை இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பான விசேட அறிமுகக் கருத்தரங்கு இன்று (23.11.2026) கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது.

நிறுவனத்தின் ஸ்தாபகர் கலாநிதி கோமதி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் தொடர்பான அறிமுகங்களும் அவற்றின் பயன்பாடுகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டன.

குறிப்பாக, இயற்கைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுவதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்பொருட்களின் பயன்பாடுகள், பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பு, இரசாயனப் பொருட்களின் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன.

மேலும், பெண்களைப் பாதிக்கக்கூடிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் தொற்றுநோய்கள் தொடர்பான விழிப்புணர்வின் அவசியமும் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை நயன்தாராவுடன் தொடர்புடைய இந்த வர்த்தக நிறுவனத்தின் தயாரிப்புகள் விரைவில் இலங்கையின் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் இவ்வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தேவையான சட்ட ஆலோசனைச் சேவைகளை DH Consultancy வழங்கி வருகின்றது. ஷாஜிதா ஜுனைட் மற்றும் முஹமட் சாத்விக் ஆகியோர் இலங்கைக்கான பிரதான விற்பனைப் பிரதிநிதிகளாகச் செயற்படுகின்றனர்.

இந்த அறிமுகத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரப் பராமரிப்புத் தயாரிப்புகள் தொடர்பான புதிய சந்தை வாய்ப்புகள் இலங்கையில் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *