November 23, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து    டிசம்பர் 7 வரை விளக்கமறியல்- இலண்டனில் உள்ள பாயிஸ் சர்வதேச பொலிசாரிடம் பிடிவிறாந்து கையளிப்பு!

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து    டிசம்பர் 7 வரை விளக்கமறியல்- இலண்டனில் உள்ள பாயிஸ் சர்வதேச பொலிசாரிடம் பிடிவிறாந்து கையளிப்பு!

(கனகராஜா சரவணன்) 

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும்    டிசம்பர் 7ம் திகதி வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  பதில் நீதவான் இன்று திங்கட்கிழமை (23) உத்தரவிட்டார்.

2008 ம் ஆண்டு  கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் உட்பட  இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைச் சம்பவத்துடன்  தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி கைது செய்தனர்.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர் பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில்; உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி சிஐடியினர் வழக்கு தாக்கல் செய்து  அவர்களை நீதிமன்றில்  ஆஜர்படுத்தப்பட்டு  அவர்களை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று திங்கட்கிழமை திறந்த நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதுடன் பிள்ளையான் இன்று கல்கிசை நீததிமன்றில் வழக்கு ஒன்றுக்கு ஆஜராகியுள்ளதால் அவரை  காணொளி மூலம் ஆஜர்படுத்த முடியவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் எழுத்து மூலமான ஆவணத்தை சமர்ப்பித்ததுடன் சிஜடி  யினர் இந்த சம்பவங்களின் சாட்சியாளர்களை  விசாரணை செய்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாக சமர்ப்பணங்களை வைத்ததையடுத்து   பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து  எதிர்வரும்   டிசம்பர் 7ம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு ண்டனில் உள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும்  முகமட் பாய்ஸ் தொடர்ந்து திறந்த பிடிவிறாந்து பிறப்பித்தார்.

இதேவேளை இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபரான லண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும்  முகமட் பாய்ஸ் கைது செய்வதற்காக சர்வதேச பொலிசாரிடம் அதற்கான பிடிவிறாந்து கடிதத்தை  நீதிமன்ற அனுமதியை பெற்று சர்வதேச பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிஜடி யினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *