இலங்கையின் பிரபல அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், எழுத்தாளருமான சி.அ. ஜோதிலிங்கம் (சிவாசுப்பிரமணியம் ஜோதிலிங்கம்) காலமானார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (08) எட்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடம்பெற்ற அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசியல், இனப்பிரச்சினை, ஈழத்தமிழர்களின் அரசியல் நிலவரங்கள் மற்றும் மலையக அரசியல் வரலாறு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு, தனது கருத்துக்களையும் அரசியல் பார்வைகளையும் ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தவர் சி.அ. ஜோதிலிங்கம்.
அரசியல் நிலவரங்கள், தேர்தல் போக்குகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் கட்டுரைகள், நூல்கள் மற்றும் நேர்காணல்கள் ஊடாகத் தனது பங்களிப்பை வழங்கிய அவர், இலங்கையின் அரசியல் ஆய்வுத்துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தார்.
அவரது மறைவு இலங்கைத் தமிழ் அரசியல் மற்றும் ஆய்வுத்துறையில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
