October 9, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் CCIB தடுப்பு நிலையம்; வர்த்தமானி வெளியீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் CCIB தடுப்பு நிலையம்; வர்த்தமானி வெளியீடு

பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பு 05, தொழிலாளர் செயலகக் கட்டிடத்தின் 7ஆம் மாடியில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை (CCIB) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு நிலையமாக அறிவித்துள்ளார்.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2509/11 ஒக்டோபர் 6ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *