October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

நாவிதன்வெளி பிரதேச சபையால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு போட்டிகள்

நாவிதன்வெளி: தேசிய வாசிப்பு மாதம் – 2026ஐ முன்னிட்டு, நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் பேச்சுப் போட்டி மற்றும் வாசிப்புத்திறன் போட்டிகள் நேற்று (13) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றன. “வாழ்நாள் முழுவதும் புத்தகத் தோழன்” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வுகளை, பிரதேச சபையின் தவிசாளர் ரூபசாந்தன் தலைமையுரையாற்றி ஆரம்பித்து வைத்தார். பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் வாசிப்புத்திறன், மொழித்திறன், படைப்பாற்றல், சிந்தனைத்திறன் மற்றும் பேச்சாற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. […]

Read More

மட்டக்களப்பில் 1000 மண் பரிசோதனை விழிப்புணர்வுத் திட்டம் ஆரம்பம்

-கிலசன்- ​மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மாவட்ட வரலாற்றிலேயே முதன்முறையாக 1000 மண் மாதிரிகளைப் பரிசோதிக்கும் பிரம்மாண்ட “மண் பரிசோதனை விழிப்புணர்வுத் திட்டம்” சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.​மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு. M. பரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது. மட்டக்களப்பு விவசாயத் திணைக்களம் (விரிவாக்கம்) மற்றும் தேசிய அடிப்படைக் கற்களுக்கான நிறுவனம் (NIFS – National Institute of Fundamental Studies) ஆகியன இணைந்து இக்கூட்டு நடவடிக்கையை […]

Read More

புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்கு நாவிதன்வெளியில்கௌரவிப்பு.

கே.எஸ்.கிலசன் சது/நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் 90 வது அகவையை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் முதற்கட்டமாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளிற்கு மேல் பெற்று சித்தி பெற்ற சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இன்று நடைபெற்றது. பழைய மாணவர்களின் பூரண அனுசரணையில் பாடசாலையின் அதிபர் திருமதி.எஸ்.பிரியசாந்தினி தலைமையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இ.ரூபசாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகள் கௌரவ அதிதிகள், […]

Read More

ஷிரந்தி ராஜபக்சவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிப்பு

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் விளக்கமறியல் உத்தரவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இதன்போது, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஷிரந்தி ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிறையில் […]

Read More

அம்பாறையில் தங்கச் சங்கிலித் திருட்டு பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிய முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது- உருக்கப்பட்ட தங்க நகைகளுடன் கல்முனைக் கடை ஊழியர்களும் சிக்கினர்

பாறுக் ஷிஹான் அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட, அத்திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு பேரை அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் ஏசல பௌர்ணமி தினத்தன்று, அம்பாறையிலுள்ள கொண்டுவட்டுவான்  குளத்திற்கு அருகே பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உகன  பகுதியில் […]

Read More

சர்வதேச விண்வெளி நிகழ்வில் பங்கேற்கும் ஸாஹிரா கல்லூரி மாணவன்!

நூருல் ஹுதா உமர் கல்முனை வலய ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை)யில் 2026ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் மாணவன் மொஹமட் நலீம் மொஹமட் ரீமாஸ், சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி இணைப்பு மற்றும் நிலைத்தன்மை நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். இந்நிகழ்வு, ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ரியாத் நகரிலுள்ள தொடர்பாடல், விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தின் (CST) தலைமையகத்தில் நடைபெறுகிறது. “இணைக்கப்பட்ட பூமி, நிலைத்த […]

Read More

அல்-அஸ்கர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிஸாத் கடமையேற்பு!

பாறுக் ஷிஹான் கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தின் புதிய அதிபராகக் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள ஏ.ஜி.எம். ரிஸாத்   அவர்களுக்குக் கல்முனை மைமூனா மகளிர் அரபு கலாபீடம் மற்றும் மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையத்தின் சார்பில் சிறப்பான கௌரவிப்பும் வரவேற்பும் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில், மைமூனா மகளிர் அரபு கலாபீடம் மற்றும் மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையத்தின் நிர்வாக சபைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு புதிய அதிபரை அன்போடு வரவேற்றனர்.  பாடசாலையின் […]

Read More

கல்முனை அபிவிருத்திக்கு விஷேட ஏற்பாடு; மாநகர சபையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

(அஸ்லம் எஸ்.மௌலானா, பாறுக் ஷிஹான்) இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “Life City” 16 நகரங்களை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின் கீழ், கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தினூடான “கல்முனை – காரைதீவு நகராக்கம்” எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 2027 ஆண்டுக்கான பட்ஜெட்டில் 16 நகரங்களை அபிவிருத்தி செய்யும் Life Cities எனும் திட்டத்தின் கீழ் கல்முனையும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான முக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று […]

Read More

கல்முனை ஆதார வைத்தியசாலை சித்தி விநாயகராலய அதிஷ்ட லாபச் சீட்டிழுப்பு 

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை  ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கட்டிடப்பணிக்கான அதிஷ்டலாப சீட்டிழுப்பு இடம்பெற்று உரிய அதிஷ்டசாலிகளுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன் தலைமையில் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பி.ஸ்ரீ சங்கர்,  வைத்திய அதிகாரிகளான மருத்துவர் எஸ்.ராகுலன்,  மருத்துவர் என். ரமேஷ், வைத்தியசாலை அபிவிருத்தி குழு பிரதி தவிசாளர்  வி.ரி.சகாதேவராஜா, பிரபல தொழிலதிபர் எஸ்.பிரகலதன், நிர்வாக […]

Read More

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ்இலங்கை நிர்வாக சேவை தரம் 1-க்கு பதவியுயர்வு பெற்றார்.

யது அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1-க்கு பதவியுயர்வு பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சைக்குத் தோற்றிய அவர் தேசிய ரீதியில் தமிழ் மொழிமூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.2012ம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவை தரம் 3-இல் தனது முதலாவது நியமனத்தைப் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, 2019 பெப்ரவரி 26ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவை தரம் […]

Read More