October 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > நாவிதன்வெளி பிரதேச சபையால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு போட்டிகள்

நாவிதன்வெளி பிரதேச சபையால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு போட்டிகள்

நாவிதன்வெளி: தேசிய வாசிப்பு மாதம் – 2026ஐ முன்னிட்டு, நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் பேச்சுப் போட்டி மற்றும் வாசிப்புத்திறன் போட்டிகள் நேற்று (13) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றன.

“வாழ்நாள் முழுவதும் புத்தகத் தோழன்” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வுகளை, பிரதேச சபையின் தவிசாளர் ரூபசாந்தன் தலைமையுரையாற்றி ஆரம்பித்து வைத்தார்.

பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் வாசிப்புத்திறன், மொழித்திறன், படைப்பாற்றல், சிந்தனைத்திறன் மற்றும் பேச்சாற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் முதலாம் நாளுக்கான போட்டிகள் நேற்று நடைபெற்றதுடன், இரண்டாம் நாளுக்கான போட்டிகள் எதிர்வரும் 21ஆம் திகதி (21.10.2026) நடைபெறவுள்ளன. அன்றைய தினம் காலை 9 மணிமுதல் விவாதப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

நேற்றைய போட்டிகளுக்கு நடுவர்களாக ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் கண. வரதராஜன், ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜெ. டேவிட் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் கே. சாந்தகுமார் ஆகியோர் பணியாற்றினர்.

பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் ஏனைய ஊழியர்களின் ஒருங்கிணைப்பில் இப்போட்டிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *