October 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > 90 வது அகவையில் புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் நாவிதன்வெளியில்கௌரவிப்பு!

90 வது அகவையில் புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் நாவிதன்வெளியில்கௌரவிப்பு!

90 வது அகவையில் புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் நாவிதன்வெளியில்கௌரவிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் 90 வது அகவையை முன்னிட்டு, முதற்கட்டமாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளிற்கு மேல் பெற்று சித்தி பெற்ற 35 சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(09) நடைபெற்றது.

பழைய மாணவர்களின்  அனுசரணையில், பாடசாலையின் அதிபர் திருமதி.எஸ்.பிரியசாந்தினி தலைமையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இ.ரூபசாந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .

நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ.பரமதயாளன் சிறப்பதிதியாக கலந்து கொண்டார்.

இரண்டு ஆண்டுகளில் 70 க்கு மேல் பெற்ற 35 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

இவ் விழாவில் பழைய மாணவரும், இந்திரன் பவுண்டேசன் ஸ்தாபகரும், தவிசாளருமான இந்திரன் ரூபசாந்தன் தரம் 5 மாணவர்களிற்கான நினைவுச் சின்னம் மற்றும் பதக்கங்களை அன்பளிப்புச் செய்திருந்ததுடன், விழா ஏற்பாட்டிற்கான அனுசரணையை வித்தியாலயத்தின் பழைய மாணவரான அ. ஜெகதீசன் ( அவுஸ்ரேலியா) பொறுப்பேற்று வழங்கியிருந்தார்.

மேலும் சிறுவர் தினத்தன்று பாரதி விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் முதன்மை நிலை ஒவ்வொன்றிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களற்கான பணப் பரிசுகள் இன்றைய தினம் கழக தலைவர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது 

 பழைய மாணவர் சங்க செயலாளர் தஅ. ரஜீவன் , ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

90 வது அகவையையொட்டி மேலும் பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *