கே.எஸ்.கிலசன்
சது/நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் 90 வது அகவையை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் முதற்கட்டமாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளிற்கு மேல் பெற்று சித்தி பெற்ற சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இன்று நடைபெற்றது.
பழைய மாணவர்களின் பூரண அனுசரணையில் பாடசாலையின் அதிபர் திருமதி.எஸ்.பிரியசாந்தினி தலைமையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இ.ரூபசாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகள் கௌரவ அதிதிகள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
90வது அகவையில் பல கல்விமான்களையும், ஆளுமைகளையும் உருவாக்கி நற்பெயரோடு நிமிர்ந்து நிற்கும் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் தாங்கள் கற்று வளர்ந்த பாடசாலையை மறவாது அங்கே கல்வி கற்கும் மாணவர்களை கௌரவப்படுத்த வேண்டுமென்ற நோக்கோடு தொடர் கௌரவிப்பு நிகழ்வுகளை நடாத்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










