October 13, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > ஷிரந்தி ராஜபக்சவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிப்பு

ஷிரந்தி ராஜபக்சவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிப்பு

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் விளக்கமறியல் உத்தரவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இதன்போது, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஷிரந்தி ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிறையில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (12) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

எனினும், அரச தரப்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ், ஷிரந்தி ராஜபக்ச நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை உண்மையெனத் தெரிவித்ததுடன், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது தொடர்பில் சிறை அதிகாரிகளுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

இதனையடுத்து, ஷிரந்தி ராஜபக்சவின் மருத்துவ நிலைமை தொடர்பான மேலதிக அறிக்கைகளை அடுத்த வழக்கு விசாரணையின்போது சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *