October 13, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அல்-அஸ்கர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிஸாத் கடமையேற்பு!

அல்-அஸ்கர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிஸாத் கடமையேற்பு!

பாறுக் ஷிஹான்

கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தின் புதிய அதிபராகக் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள ஏ.ஜி.எம். ரிஸாத்   அவர்களுக்குக் கல்முனை மைமூனா மகளிர் அரபு கலாபீடம் மற்றும் மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையத்தின் சார்பில் சிறப்பான கௌரவிப்பும் வரவேற்பும் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில், மைமூனா மகளிர் அரபு கலாபீடம் மற்றும் மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையத்தின் நிர்வாக சபைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு புதிய அதிபரை அன்போடு வரவேற்றனர்.

 பாடசாலையின் கல்வி, ஒழுக்கம் மற்றும் உட்கட்டமைப்பு நிர்வாகத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் அதிபர் ஏ.ஜி.எம். ரிஸாத் அவர்களின் சேவையைப் பாராட்டியும், அவரது எதிர்காலக் கல்விப் பணிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையிலும், நிர்வாக சபையினரால் அவருக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டுச் சிறப்பு வரவேற்பளித்து கௌரவிக்கப்பட்டது.

இக் கௌரவிப்பு நிகழ்வில் மைமூனா மகளிர் அரபு கலாபீடத்தின் முக்கியஸ்தர்கள், மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையத்தின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

புதிய அதிபரின் தலைமையின் கீழ் கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயம் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டுமென நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *