October 14, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ்இலங்கை நிர்வாக சேவை தரம் 1-க்கு பதவியுயர்வு பெற்றார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ்இலங்கை நிர்வாக சேவை தரம் 1-க்கு பதவியுயர்வு பெற்றார்.

யது

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1-க்கு பதவியுயர்வு பெற்றுள்ளார்.

2011ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சைக்குத் தோற்றிய அவர் தேசிய ரீதியில் தமிழ் மொழிமூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.2012ம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவை தரம் 3-இல் தனது முதலாவது நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, 2019 பெப்ரவரி 26ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவை தரம் 2-க்கு பதவியுயர்வு பெற்றார். தனது சேவைக்காலத்தில் பல்வேறு பிரதேச செயலகங்களிலும் கிழக்கு மாகாண ஆட்பதிவுத் திணைக்களத்திலும் பணியாற்றிய இவர், பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இப்பதவியுயர்வின் மூலம், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களிடையே, நாவிதன்வெளி மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளர்களுக்கு அடுத்த நிலையில் மூப்பு (Seniority) பெற்றவராக இவர் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை மற்றும் இலங்கை திட்டமிடல் சேவை உள்ளிட்ட பல்வேறு அரச சேவைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான வளவாளராகவும் இவர் செயற்பட்டு வருகின்றார். இதன் ஊடாகப் பலருக்குக் கற்பித்தல் மற்றும் வழிகாட்டல் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றமை சிறப்பம்சமாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *