( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கட்டிடப்பணிக்கான அதிஷ்டலாப சீட்டிழுப்பு இடம்பெற்று உரிய அதிஷ்டசாலிகளுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன் தலைமையில் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பி.ஸ்ரீ சங்கர், வைத்திய அதிகாரிகளான மருத்துவர் எஸ்.ராகுலன், மருத்துவர் என். ரமேஷ், வைத்தியசாலை அபிவிருத்தி குழு பிரதி தவிசாளர் வி.ரி.சகாதேவராஜா, பிரபல தொழிலதிபர் எஸ்.பிரகலதன், நிர்வாக உத்தியோகத்தர் ரி.தேவ அருள், தாதிய பரிபாலகர் என். சசிதரன் உள்ளிட்ட ஆலய பரிபாலன சபையினர் பலர் கலந்து கொண்டார்கள்
சீட்டிழுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது.
முதலாம் பரிசு: கே.சர்ஜித் – மண்டூர்
இரண்டாம் பரிசு: மு.வேலுநாயகம் – வசந்தம், காரைதீவு-05
மூன்றாம் பரிசு: செல்வி – பிரதான வீதி, பெரியகல்லாறு ஆகியோர் பெற்றனர்.
ஆறுதல் பரிசுகளை
மு.அருண்குமார் – பெரியநீலாவணை, எஸ்.ருசாணி – விநாயகபுரம், மட்டக்களப்பு, கண்ணம்மை – விஷ்ணு வித்தியாலய வீதி, காரைதீவு, கை.புஸ்பலதா – PTK முன் வீதி, பாண்டிருப்பு, என்.டெய்சி – சர்மிலன் வீதி, பாண்டிருப்பு 02 ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பரிசில்கள் கடந்த சனிக்கிழமை (03.10.2026) அன்று வைத்தியசாலை பணிப்பாளர் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு பெற்றவர் அதனை மீண்டும் ஆலயத்திற்கு அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.










