October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றம்!

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை மகா சங்கத்தினர் அகற்றியுள்ளனர். கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (16) காலை பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, இந்தக் கூடாரங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More

​பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் “வாணி விழா ஊர்வலம்” நாளை(17)!

சௌவியதாசன் ​பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில், நவராத்திரி விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் “வாணி விழா ஊர்வலம்” நாளை 17.10.2026 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. ​இந்நிகழ்வானது பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி பின்வரும் பாதையினூடாக பயணித்து மீண்டும் பாடசாலையை வந்தடையவுள்ளது: ​ஊர்வலப் பாதை ஒழுங்கு:​பாடசாலையில் இருந்து ஆரம்பித்து பிரதான வீதியூடாக முருகன் கோயிலைச் சென்றடைதல். ​அங்கிருந்து சரஸ்வதி பாடசாலை வீதியினூடாக பிள்ளையார் கோயிலை அடைதல். ​பின்னர் கடற்கரை வீதியினூடாக ஆழி […]

Read More

119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்தில் அழைப்பு: கல்முனையில் விசாரணை

119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்தில் அழைப்பு: இதுவரை 11,000 பேரிடம் விசாரணைமூல ஆவணங்களைப் பெறும் நபர்கள் குறித்துக் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் விசேட எச்சரிக்கைபாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபா 2 இலட்சம் வழங்கப்படும் என ஆணையாளர் தகவல் பாறுக் ஷிஹான் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) இன்று காலை அழைக்கப்பட்டுள்ளனர். இச்சந்திப்பின் போது, தசாப்த காலங்களாக உறவுகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் […]

Read More

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.  

    (கனகராஜா சரவணன் மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு  உடந்தையாக இருக்கும் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி  மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (16) காலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு இலஞ்ச ஒழிப்பு போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டினையடுத்து இன்று காலை 9.00 மணிக்கு கல்லடியில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் […]

Read More

அடுத்த வாரம் முதல் திடீர்ச் சுகாதாரப் பரிசோதனைகள்; விதிமீறின் கடும் சட்ட நடவடிக்கை

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பொருட்களின் பொதியிடல், பெயரிடல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்நிகழ்வின் போது அனைத்து உணவுக் கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவு வியாபாரிகளுக்கான கட்டாய வழிகாட்டல்களாக உணவைக் கையாளும் போது பணியாளர்கள் அனைவரும் பொருத்தமான பொலித்தீன் கையுறைகளை அணிய வேண்டும்,சமையல் மற்றும் உணவு பரிமாறும் பணியாளர்கள் […]

Read More

பெரியநீலாவணையில் பயங்கர தீ விபத்து: இரு கடைகள் முற்றாக எரிந்து நாசம்- பொலிஸார் விசாரணை

(சௌவியதாசன் – ஹுர்மன்) நான்கு கடைகளைக் கொண்ட கடைத் தொகுதிக்கு பெரும் சேதம்; பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவு கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில், பெரியநீலாவணைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் நான்கு கடைகளைக் கொண்ட கடைத் தொகுதி பெரும் சேதமடைந்துள்ளது. இதில் இரண்டு கடைகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதுடன், ஏனைய இரண்டு கடைகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பெரியநீலாவணைப் பகுதியில் பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள குறித்த கடைத் தொகுதியில், நாற்காலிகளுக்கான குஷன் […]

Read More

பாண்டிருப்பில் நடைபெற்ற முதியோர்களின் உளநலத்தைப் பேணும் விழிப்புணர்வு நிகழ்வு!

அரவிந்தன் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கலாச்சார மத்திய நிலையத்தில், முதியோர்களின் உளநலத்தைப் பேணுதல் மற்றும் உளநலப் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் சாந்த வழிமுறைப் பயிற்சிகளும் அண்மையில் இடம்பெற்றன. சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதியோர்களின் உளநலத்தைப் பாதுகாத்தல், அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்தல், உளநலப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காணுதல் மற்றும் ஆரோக்கியமான முதுமை வாழ்வை ஊக்குவித்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும், முதியோர்களின் மன […]

Read More

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற (15) சர்வதேச வெண்பிரம்பு தினம்

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் இணைந்து சர்வதேச வெண் பிரம்பு தின நிகழ்வை இன்று (15) வியாழக்கிழமை கல்முனையில் சிறப்பாக நடாத்தியது தரிசனம் பார்வையற்றோர் பாடசாலை மற்றும் உதயம் பார்வையற்றோர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்வு, பார்வைக் குறைபாடுடையவர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் சம வாய்ப்புகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என லயன் பொறியியலாளர் எம். சுதர்சன் தெரிவித்தார். இந்நிகழ்வில் சுமார் […]

Read More

வாக்குறுதியை நிறைவேற்றிய சிட்னி பிரஜை

( வி.ரி. சகாதேவராஜா) ஒரு வருடத்துக்கு முன்பு அம்பாறை மாவட்டத்தில் சில பின்தங்கிய பாடசாலைகளின் மாணவர்களுக்கு உதவி வழங்கிய விழாவில், அளித்த வாக்குறுதியை, காரைதீவைச் சேர்ந்த தற்சமயம் அவுஸ்திரேலியா சிட்னியில் வாழுகின்ற பிரபல சமூக செயற்பாட்டாளர் தம்பியப்பா  கணேசநாதன் நேற்று  நிறைவு செய்தார்.  அவுஸ்திரேலியாவிலிருந்து அதற்கென இலங்கைக்கு வந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் தம்பியப்பா கணேசநாதன் நேற்று வீரச்சோலை தமிழ் மகா வித்தியாலயம்,  நாவிதன்வெளி நாமகள் வித்தியாலயம் மற்றும் காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இம்முறை […]

Read More

28 ஆண்டுகளாக நல்லிணக்கத்தின் பாலமாகத் திகழும் ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபை; 7,300 பிணக்குகளுக்குத் தீர்வு.

(செல்வி வினாயகமூர்த்தி) மக்களிடையே ஏற்படும் முரண்பாடுகளைப் பகைமையாக வளர விடாமல், பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பரப் புரிந்துணர்வின் மூலம் தீர்வுகளை எட்டுவதில் மத்தியஸ்த சபைகள் முக்கிய பங்காற்றுகின்றன. நீதிமன்றங்களின் நீண்டகால சட்ட நடவடிக்கைகளுக்குச் செல்லாமல், இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பை வழங்கும் இவ்வமைப்புகள், சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முக்கிய பொறிமுறையாக விளங்குகின்றன. அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இயங்கும் மத்தியஸ்த சபை, 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதியுடன் தனது 28 […]

Read More