சௌவியதாசன்
பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில், நவராத்திரி விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் “வாணி விழா ஊர்வலம்” நாளை 17.10.2026 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வானது பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி பின்வரும் பாதையினூடாக பயணித்து மீண்டும் பாடசாலையை வந்தடையவுள்ளது:
ஊர்வலப் பாதை ஒழுங்கு:
பாடசாலையில் இருந்து ஆரம்பித்து பிரதான வீதியூடாக முருகன் கோயிலைச் சென்றடைதல்.
அங்கிருந்து சரஸ்வதி பாடசாலை வீதியினூடாக பிள்ளையார் கோயிலை அடைதல்.
பின்னர் கடற்கரை வீதியினூடாக ஆழி தந்த லிங்கேஸ்வரர் கோயிலைச் சென்றடைதல்.
அங்கிருந்து செல்லத்துரை குறுக்கு வீதியினூடாக பெரியதம்பிரான் ஆலயத்தை அடைதல்.
தொடர்ந்து விபுலாணந்தர் வீதியினூடாக விஷ்ணு கோயிலுக்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் பாடசாலையை வந்தடைதல்.
ஊர்வலம் பயணிக்கும் பாதையோரங்களில் உள்ள ஊர்மக்கள் அனைவரும் பூரண கும்பம் வைத்து, கலைமகளின் அருள் பெற வழிபாடுகளில் ஈடுபடுமாறு பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய இந்து மாமன்றத்தினர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.