October 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற (15)கல்முனையில் சர்வதேச வெண்பிரம்பு தினம்

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற (15)கல்முனையில் சர்வதேச வெண்பிரம்பு தினம்

( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை நகர லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் இணைந்து சர்வதேச வெண் பிரம்பு தின நிகழ்வை இன்று (15) வியாழக்கிழமை கல்முனையில் சிறப்பாக நடாத்தியது

தரிசனம் பார்வையற்றோர் பாடசாலை மற்றும் உதயம் பார்வையற்றோர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்வு, பார்வைக் குறைபாடுடையவர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் சம வாய்ப்புகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என லயன் பொறியியலாளர் எம். சுதர்சன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுமார் 50 பார்வையற்ற மாணவர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலை பணியாளர்கள், சமூக சேவை பிரதிநிதிகள், லயன்ஸ், லியோ உறுப்பினர்கள் என சுமார் 150 பேரும், விழிப்புணர்வு நடைபயணத்தில் சுமார் 300 பேரும் பங்கேற்கவுள்ளனர்.

நடைபயணம் மற்றும் நினைவு நிகழ்ச்சி

நிகழ்ச்சி காலை விழிப்புணர்வு நடைபயணத்துடன் ஆரம்பமாகியது . கல்முனை CTB சந்தியில் இருந்து ஆதார வைத்தியசாலை சந்தி வரை சுமார் 400 மீட்டர் தூரம் இந்த நடைபயணம் இடம்பெற்றது.

பங்கேற்பாளர்கள் சிங்கம் ஸ்டூடியோ சந்தியில் வாத்தியக் குழுவுடன் ஒன்றுகூடினர்

நடைபயணத்தை தொடர்ந்து வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் பார்வையற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக லயன்ஸ் சர்வதேச மாவட்டம் 306 D10 இன் மாவட்ட ஆளுநர் கலந்து கொண்டார்

CFC மற்றும் வெஸ்லி கல்லூரி மாணவர்கள், CFC கல்லூரி வாத்தியக் குழுவினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பாடசாலை மாணவர்களின் பங்கேற்பு இளைஞர்களிடையே பச்சாதாபம் மற்றும் சமூகப் பொறுப்பை வளர்க்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ்வின் இறுதியில் பார்வையற்ற மாணவர்களுக்கு லயன்ஸ் கழகத்தினரால் பரிசுகள் வழங்கப்பட்டன

பிரதம விருந்தினராக

Lion G. ஷாஹிர் அஹமட் PMJF / PMAF , திரு. T.J. அதிசயராஜ் பிரதேச செயலாளர், கல்முனை வடக்கு , பொது விடயங்களுக்கான பொலிஸ் பொறுப்பதிகாரி , முன்னாள் கிழக்கு மாகாண செயலாளர் மூ.கோபாலரெட்ணம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் .

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *