October 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > பாண்டிருப்பில் நடைபெற்ற முதியோர்களின் உளநலத்தைப் பேணும் விழிப்புணர்வு நிகழ்வு!

பாண்டிருப்பில் நடைபெற்ற முதியோர்களின் உளநலத்தைப் பேணும் விழிப்புணர்வு நிகழ்வு!

அரவிந்தன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கலாச்சார மத்திய நிலையத்தில், முதியோர்களின் உளநலத்தைப் பேணுதல் மற்றும் உளநலப் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் சாந்த வழிமுறைப் பயிற்சிகளும் அண்மையில் இடம்பெற்றன.

சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதியோர்களின் உளநலத்தைப் பாதுகாத்தல், அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்தல், உளநலப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காணுதல் மற்றும் ஆரோக்கியமான முதுமை வாழ்வை ஊக்குவித்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், முதியோர்களின் மன அமைதியையும் உளநலத்தையும் மேம்படுத்தும் நோக்கில் சாந்த வழிமுறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர்களின் நிர்வாக உத்தியோகத்தர், சமூக சேவைப் பிரிவின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதியோர்களின் உளநலத்தைப் பாதுகாப்பதுடன், அவர்களுக்கான சமூக ஆதரவை வலுப்படுத்தி, கண்ணியமானதும் ஆரோக்கியமானதுமான முதுமை வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *