October 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > வாக்குறுதியை நிறைவேற்றிய சிட்னி பிரஜை

வாக்குறுதியை நிறைவேற்றிய சிட்னி பிரஜை

( வி.ரி. சகாதேவராஜா)

ஒரு வருடத்துக்கு முன்பு அம்பாறை மாவட்டத்தில் சில பின்தங்கிய பாடசாலைகளின் மாணவர்களுக்கு உதவி வழங்கிய விழாவில், அளித்த வாக்குறுதியை, காரைதீவைச் சேர்ந்த தற்சமயம் அவுஸ்திரேலியா சிட்னியில் வாழுகின்ற பிரபல சமூக செயற்பாட்டாளர் தம்பியப்பா  கணேசநாதன் நேற்று  நிறைவு செய்தார்.

 அவுஸ்திரேலியாவிலிருந்து அதற்கென இலங்கைக்கு வந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் தம்பியப்பா கணேசநாதன் நேற்று வீரச்சோலை தமிழ் மகா வித்தியாலயம்,  நாவிதன்வெளி நாமகள் வித்தியாலயம் மற்றும் காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஐந்து மாணவர்களுக்கு பெறுமதியான பரிசுகளையும் பணப்பரிசையும் வழங்கி வைத்தார்.

பிரதம அதிதியாக,  அவுஸ்திரேலியா சிட்னி PR Foundation அமைப்பின்  பிரதிநிதியும், ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில்,  ற. சஹான்,  டி.டதுர்ஷனன், ந. அத்ரிகா , என். திக்ஷாந்த் , ஏ.கிதுஷனா ஆகிய மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் பணப்பரிசும் வழங்கப்பட்டன. 

அச் சமயத்தில் அந்தந்த பாடசாலை அதிபர்கள் கற்பித்த ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *