வெகுவிமர்சையாக இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் வாணி விழா நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், 2026 ஆம் ஆண்டுக்கான வாணி விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளரும் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான திரு. எம். பரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. உதவி விவசாயப் பணிப்பாளர்கள், பண்ணை முகாமையாளர், நலன்புரிச் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்கள், திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களினதும் ஒத்துழைப்புடன் இவ்விழா சிறப்புற நடைபெற்றது. […]