மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், 2026 ஆம் ஆண்டுக்கான வாணி விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளரும் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான திரு. எம். பரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
உதவி விவசாயப் பணிப்பாளர்கள், பண்ணை முகாமையாளர், நலன்புரிச் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்கள், திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களினதும் ஒத்துழைப்புடன் இவ்விழா சிறப்புற நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் வாணி விழாவை முன்னிட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் வேண்டுமென்ற உயரிய நோக்கத்துடன் விவசாயத் திணைக்களத்தினால் இத்தகைய நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இவ்வாண்டு நடைபெற்ற வாணி விழாவில் திணைக்கள உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும், ஆன்மீகச் சொற்பொழிவும் இடம்பெற்றிருந்தது.
ஆன்மீகம், கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை ஒருங்கிணைத்த இந்நிகழ்வு, திணைக்கள உத்தியோகத்தர்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது.












