October 18, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக அருட்பிரகாசம் சுமன் கடமையேற்பு -நட்சத்திரா கழகம் வாழ்த்து

நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக அருட்பிரகாசம் சுமன் கடமையேற்பு -நட்சத்திரா கழகம் வாழ்த்து

நாவிதன்வெளி, அன்னமலை மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு. அருட்பிரகாசம் சுமன் (SLPS-I) நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய அதிபருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில், நாவிதன்வெளி நட்சத்திரா விளையாட்டுக் கழகத்தினர் அவரைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து வரவேற்றனர்.

இதன்போது, புதிய அதிபரின் எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமையவும், பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் அவர் சிறந்த பங்களிப்பை வழங்கவும் கழகத்தினர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நாவிதன்வெளி நட்சத்திரா விளையாட்டுக் கழகமானது விளையாட்டுத் துறையுடன் மாத்திரம் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளாது, பிரதேசத்தின் சமூக முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்டு பல்வேறு சமூகப் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *