ஊழலுக்கு எதிராக நடவடிக்கை கோரி கொழும்பில் பேரணி!
ஊழலுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகச் சென்றடைந்தது.
‘ஜன வரமே பிரஜாவியோ’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறான சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனைகளை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.