சர்மிலன்
நாவிதன்வெளி கிராமத்தில் இன்று அதிகாலை காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளன. இதன்போது மூன்று வீடுகளின் மதில்கள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.
கிராமத்திற்குள் காட்டு யானைகள் தொடர்ச்சியாக ஊடுருவி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, காட்டு யானைகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





