October 18, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > ​பாண்டிருப்பு கல்வி மேம்பாட்டுச் சங்கத்தின் உத்தியோகபூர்வ காரியாலயத் திறப்பு விழாவும் வாணி விழா நிகழ்வும்

​பாண்டிருப்பு கல்வி மேம்பாட்டுச் சங்கத்தின் உத்தியோகபூர்வ காரியாலயத் திறப்பு விழாவும் வாணி விழா நிகழ்வும்


​
பாண்டிருப்பு கல்வி மேம்பாட்டுச் சங்கத்தின் (PEDA – Pandiruppu Education Development Association) உத்தியோகபூர்வ காரியாலயத் திறப்பு விழா மற்றும் வாணி விழா நிகழ்வுகள் (17/10/2026) சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவில் பின் வீதியில் அமைந்துள்ள காரியாலய வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றன.


​இந்நிகழ்வின் விஷேட அம்சமாக, பாண்டிருப்பு கல்வி மேம்பாட்டுச் சங்கத்தின் உத்தியோகபூர்வ காரியாலயம் மற்றும் சிறுவர்களின் பயன்பாட்டிற்கான சிறுவர் பூங்கா என்பன அதிதிகளால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.


​மேலும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக அமையும் வகையில், ‘கல்முனை பிராந்திய இணையம் – கனடா’ அமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்ட புகைப்படப் பிரதி இயந்திரம் (Photocopy Machine), அவ்வமைப்பின் செயற்பாட்டாளர் திரு. என். சௌவியதாசன் அவர்களால் பாண்டிருப்பு கல்வி மேம்பாட்டுச் சங்க நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.


​இவ்விழாவில் கல்வி மேம்பாட்டுச் சங்கத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்ட தோடு, சமூக நலன்புரிச் சேவையின் ஓர் அங்கமாக பாண்டிருப்பு கிராமத்தில் மரண வீடுகள் சம்பவிக்கும் பட்சத்தில், அம் மரண வீடுகளின் பயன்பாட்டிற்காக இலவசமாக 50 நாற்காலிகளைப் (Chairs) வழங்குவதற்கும் தமது அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக பாண்டிருப்பு கல்வி மேம்பாட்டுச் சங்கம் தெரிவித்துள்ளது.


​இவ்விழாவில் அதிபர்கள், சட்ட ஆலோசகர்கள், ஆன்மீகப் பெரியார்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், சன சமூக நிலையம் உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.


​”கல்வியே சமூக மாற்றத்தின் திறவுகோல்” என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *