October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தின் கலைமகள் ஊர்வலம்!

-க. டினேஸ்- வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலைமகள் ஊர்வலம் பாடசாலை அதிபர் திருமதி கௌ. கணேஸ்வரன் அவர்கள் தலைமையில் இன்று (19.10.2026) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கல்விக்கும் கலைக்கும் அதிபதியான கலைமகளைப் போற்றும் வகையில் நடைபெற்ற இவ்வூர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர். கல்வி, கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வளர்க்கும் நோக்கில் நடைபெறுகின்ற இவ்வாறான நிகழ்வுகளில் மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானது. கலைமகளின் அருளால் மாணவர்கள் கல்வியிலும் கலைத்துறையிலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்!

Read More

அம்பாறை மாவட்ட செயலக நவராத்திரி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

அம்பாறை மாவட்ட செயலக நவராத்திரி பூசை நிகழ்வு 2026.10.19 இன்று மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்கிரம ஆரச்சி அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சி. ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சு. கரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மூவின உத்தியோகத்தர்களும் அவர்களின் பிள்ளைகளும் கலந்து கொண்ட நவராத்திரி பூஜை ஆனது இந்து மன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் காரைதீவு பெண்கள் பாடசாலை மாணவிகளினால் நவராத்திரி பூஜை தொடர்பான நடனமும் பஜனை […]

Read More

கல்முனை விவேகானந்தா தமிழ் வித்தியாலய வாணி விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்!

கல்முனை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் வாணி விழாவும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (19.10.2026) பாடசாலை அதிபர் எஸ். தனராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம்பெற்றன. இந்நிகழ்வின் பிரதம அதிதியாகப் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், தமிழ் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான எஸ். சுரேஸ்குமார் கலந்துகொண்டார். மேலும், ஓய்வுபெற்ற அதிபர் கே. தயானந்தன், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் […]

Read More

பாண்டிருப்பு நிருத்தன ஷேஸ்த்ரா நாட்டியப்பள்ளியின் புதிய பரதநாட்டிய வகுப்புகள் நாளை (20)ஆரம்பம்!

நிருத்தன ஷேஸ்த்ரா நாட்டியப்பள்ளியின் புதிய பரதநாட்டிய வகுப்புகள் ஆரம்பம்! நாளை விஜயதசமி நன்னாளன்று ‘நிருத்தன ஷேஸ்த்ரா நாட்டியப்பள்ளி’யின் புதிய பரதநாட்டிய வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. பரதநாட்டியத்தில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட மாணவச் செல்வர்கள் இதில் இணைந்து கொண்டு பயனடையலாம். இப் பயிற்சி வகுப்புகள் பரத கலைவித்தகர் லோஜிகா கமலநாதன் (நுண்கலைமணி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களால் நடாத்தப்படவுள்ளன. மேலதிக விபரங்களுக்கு 0704903062 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Read More

சுவாமி விபுலானந்தர்  நினைவு மணி மண்டபத்தை  புனரமைக்க  ஏற்பாடு!

(வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்புக் கிளையின்100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் நினைவு மணி மண்டபத்தைப் புனரமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. அப்பணிக்காக பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகளிடம் நன்கொடை வழங்குமாறு இராமகிருஷ்ண மிஷன் அழைப்பு விடுத்துள்ளது. மிஷனின் வரலாற்றுச் சின்னமாகவும் ஆன்மிகப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கும் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம், காலப்போக்கில் சேதமடைந்துள்ளதால் அதனை முழுமையாகப் புனரமைக்கும் பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி […]

Read More

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கலைவாணி கலை விழாவும்  கௌரவிப்பும்!

​ ​பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கலைவாணி கலை விழாவும்  கௌரவிப்பும்! ​ பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் சரஸ்வதி வாணி விழாவும், மாணவர்களின் திறமைகளைப் போற்றும் பரிசளிப்பும் கெளரவிப்பும் இன்றைய தினம் (19.10.2026) பாடசாலைமுதல்வர் திரு. A.A. லோரன்ஸ் அவர்களின் தலைமையில், ஒன்று கூடல் வெளி அரங்கில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.   ​கல்வியோடு இணைந்த கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாடசாலை மட்டத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும், மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று விழாவை வண்ணமயமாக்கின. ​சிறப்பு கௌரவிப்பு: இதன்போது, சமூக சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டுவரும் ‘உதவும் பொற்கரங்கள்’ அமைப்பின் தாயக இணைப்பாளர் திரு. N. சௌவியதாசன் அவர்களின் கல்வி சார்ந்த மற்றும் பொதுப் பணிகளைப் பாராட்டி, பல்வேறு பொது அமைப்புகளுடன் இணைந்து அவர் வழங்கும் சேவைகளைச் சிறப்பிக்கும் முகமாக பாடசாலை சமூகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுச்  சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். ​இந்நிகழ்வில் வலய கல்வி அலுவலகத்தின் கல்வி ஆலோசகர் (இந்து சமயம்) திரு. மா. லக்குணம் பிரதான அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் திரு. G. ஜோதிராஜா கௌரவ அதிதியாகவும், இந்து கலாசார திணைக்கள வளவாளர் திரு. நா. சனாதனன் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், ஆலயங்களின் பரிபாலன சபையினர், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.   ​விழாவின் இறுதியில் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் வெற்றிகரமாக நிறைவுபெற்றன.

Read More

இக்கட்டான சூழ்நிலையிலும் அனோஜனுக்காக சவூதி சென்ற சட்டக்குழு :வெளிப்படுத்திய விபரம்

27 வயதான இலங்கை இளைஞர் ஒருவரின் வாழ்க்கை, சில வினாடிகளுக்கு முன்பு அவர் தற்செயலாக எழுதிய ஒரு முகநூல் பதிவிற்கும், பத்து நிமிடங்கள் கழித்து அவர் நீக்கிய காணொளி மன்னிப்பிற்கும் இடையில் சிக்கித் தவித்தது. சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனோஜன் சிவராசாவுக்கு நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, இலங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் தூதர்கள் குழுவின் மாபெரும் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த வாரம் சவூதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆரம்பகட்ட விசாரணையின் […]

Read More

ஆலையடிவேம்பில் நவராத்திரி விழா கோலாகலம் -அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஊர்வலம், கலை நிகழ்வுகள் சிறப்பு

ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஊர்வலமும் கலை நிகழ்வுகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. ஆலையடிவேம்பு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சங்கரி கிருஷ்ணகுமாரின் ஒருங்கிணைப்பில், கலாசார அலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்வின் ஆரம்பமாக, ஆலையடிவேம்பு கலைமகள் அறநெறிப் பாடசாலை மற்றும் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கேற்ற […]

Read More

பெரியநீலாவணையில் மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் , காவேரி மொபைல் செயலி அறிமுகம்; அச்சு இயந்திரம் அன்பளிப்பு

பெரியநீலாவணையில் மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் , காவேரி மொபைல் செயலி அறிமுகம்; அச்சு இயந்திரம் அன்பளிப்பு! பெரியநீலாவணை: காவேரி கல்விசார் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மாணவர்களுக்கான இலவச சீருடை விநியோகம் மற்றும் காவேரி விளையாட்டுக் கழகத்தின் புதிய மொபைல் செயலி (Mobile Application) அறிமுக விழா ஆகிய இரட்டை நிகழ்வுகள் இன்று மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றன. கமு/ சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, காவேரி கல்விசார் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் திரு. வே. அரவிந்தன் […]

Read More

3 கிலோ கலவன் மீன் வெறும் 500 ரூபாவிற்கு விற்பனை  கரைவலை மீன்பிடி அதிகரிப்பால் மீன் சந்தையில் விலை சரிவு -18.10.2026

பாறுக் ஷிஹான்  கலவன், கீரி மற்றும் சீலா மீன்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்லக் குவியும் பொதுமக்கள்!  அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரைவலை மீன்பிடியில் மிகக் கூடுதலான அளவில் மீன்கள் சிக்கியுள்ளதன் காரணமாக, பெண்கள் சந்தையில் கலவன் மீன் உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகள் மிக மலிவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இன்றைய தினத்தில் மீனவர்களின் வலையில் பெருமளவில் மீன்கள் சிக்கியுள்ளமையால், உள்ளூர் மீன் சந்தையில் நுகர்வோருக்கான விலைகள் சடுதியாகக் குறைந்துள்ளன. இதன் […]

Read More