-க. டினேஸ்-
வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலைமகள் ஊர்வலம் பாடசாலை அதிபர் திருமதி கௌ. கணேஸ்வரன் அவர்கள் தலைமையில் இன்று (19.10.2026) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கல்விக்கும் கலைக்கும் அதிபதியான கலைமகளைப் போற்றும் வகையில் நடைபெற்ற இவ்வூர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கல்வி, கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வளர்க்கும் நோக்கில் நடைபெறுகின்ற இவ்வாறான நிகழ்வுகளில் மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானது.
கலைமகளின் அருளால் மாணவர்கள் கல்வியிலும் கலைத்துறையிலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்!












